close
Choose your channels

பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர்

Friday, March 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி,.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லிங்கா' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ராக்லைன் வெங்கடேஷ் வில்லனாக நடிக்கவில்லை என்றும், படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ் பல பேட்டிகளில் தான் ஒரு பாலா பட ரசிகர் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிந்ததே

ஏற்கனவே ராம்கோபால் வர்மாவின் 'கில்லிங் வீரப்பன்' என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்துள்ள ராக்லைன் வெங்கடேஷ், இந்த படத்தில் சற்று பெரிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இம்மாத இறுதியில் அவர் 'நாச்சியார்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.