close
Choose your channels

இளம் இசைப்புயல் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஒருசில வருடங்களில் அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் அனிருத். தற்போது அஜித்தின் 'விவேகம்', சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களில் அனிருத் இசையமைத்து வருகிறார்

இந்நிலையில் நேற்று அனிருத்தின் ரிகார்டிங் ஸ்டுடியோவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய அனிருத், தலைவரின் இந்த விசிட் தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். அனிருத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் இந்த சந்திப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு மிக விரைவில் அனிருத் இசையமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.