close
Choose your channels

தெலுங்கு 'பவர்பாண்டி'யில் ரஜினியின் நெருங்கிய நண்பர்

Sunday, April 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளியன்று வெளியான தனுஷ் இயக்கிய முதல் படமான 'பவர்பாண்டி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. தேசிய விருது பெற்ற நடிகர், பாடகர், பாடலாசிரியர், தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் ஆகிய பெருமைகளை அடுத்து இயக்குனர் தேர்விலும் தனுஷ் பாஸ் ஆகிவிட்டதாகவே விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் 'பவர்பாண்டி' படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்பாபுவுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன் பாபு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ஆசைப்பட, மோகன்பாபுவும் அதை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது

'பவர்பாண்டி' தெலுங்கு ரீமேக் படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சுப்பிரமணிய சிவா இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் 'பவர்பாண்டி' படத்தை விரைவில் அமிதாப்பச்சன் பார்க்கவுள்ளதாகவும், அவருக்கு இந்த படம் பிடித்தால் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தனுஷின் முதல் இயக்கத்தில் வெளிவந்த 'பவர்பாண்டி' தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் ஆனால் அவருக்கு கிடைக்கும் டிரிபிள் புரமோஷனாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.