close
Choose your channels

சூர்யாவின் '24' சென்சார் தகவல்கள்

Thursday, April 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்படும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது,.
'24' படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு அனைவரும் எதிர்பார்த்தபடியே 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இந்த படம் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.