close
Choose your channels

சூர்யாவின் '24' சென்சார் தேதி குறித்த தகவல்

Sunday, April 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் சென்சார் செய்யப்படும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'24' படத்தை நாளை சென்சார் அதிகாரிகள் பார்த்து சர்டிபிகேட் தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படமும் சூர்யாவின் மற்ற படங்களை போலவே 'யூ' சர்டிபிகேட் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.