close
Choose your channels

மீண்டும் இணைகிறதா துருவநட்சத்திரம்? புதிய தகவல்

Thursday, November 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2013ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் திடீரென ஒருசில காரணங்களால் டிராப் ஆனது. இதனால் கவுதம் மேனன் -சூர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவுதம் மேனன், 'ஒரு நண்பர் என்ற முறையில் சூர்யா, 'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து விலகியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், பழையதை மறந்துவிட்டு மீண்டும் இருவரும் இணைவதற்கு பேச்சு நடத்தி வருகிறோம். மிக விரைவில் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவேன்' என்று கூறியுள்ளார்.

சூர்யா-கவுதம் மேனன் இணையும் இந்த படம் 'துருவ நட்சத்திரம்' படம் தானா? அல்லது முற்றிலும் வேறு ஸ்கிரிப்டா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.