close
Choose your channels

'மனம்' தமிழ் ரீமேக்கில் சிவகுமார்-சூர்யா-கார்த்தி?

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துள்ள '24' படத்தை இயக்கியுள்ள விக்ரம்குமார், இதற்கு முன்னர் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த 'மனம்' என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய சூர்யா திட்டமிட்டிருந்தாராம்.

'மனம்' தமிழ் ரீமேக்கில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகிய மூவரும் நடிக்க ஆலோசனை செய்த நேரத்தில் விக்ரம்குமார் கூறிய புதிய கதைதான் '24' படத்தின் கதை என கூறப்படுகிறது. '24' படத்தின் கதை சூர்யாவை மிகவும் இம்ப்ரஸ் செய்ததால் முதலில் இந்த படத்தில் முதலில் நடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் விக்ரம்குமார் இயக்கத்தில் சிவகுமார், சூர்யா, கார்த்தி நடிக்கும் 'மனம்' தமிழ் ரீமேக் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.