close
Choose your channels

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' புதிய அப்டேட்

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'சி3' திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ரொமான்ஸ் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இசையில் சூர்யா-கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும், வெகுவிரைவில் இந்த படத்தின் பாடல் டீசர் ஒன்று வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களுடன் பணிபுரிவது தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.