close
Choose your channels

ஒரே பாடலில் சூர்யா-விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்

Monday, June 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே பாடலில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் தோன்றுவது புதிதல்ல. 'கோ' உள்பட பல படங்களில் இடம்பெற்ற பாடல்களில் தோன்றியுள்ளனர். அந்த வகையில் தற்போது சூர்யா உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக தோன்றுகின்றனர்.

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கியுள்ள 'கூட்டத்தில் ஒருவன்' திரைப்படத்தை வித்தியாசமான புரமோஷன் செய்யும் வகையில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ரியாக்ஷனை படம் பிடித்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டனர். 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் இசையமைத்து பாடியுள்ளார்.

சூர்யா, சிவகார்த்திகேயன், நாசர், சிவகுமார், ஆர்ஜே பாலாஜி, விஜய்சேதுபதி, ஆர்யா, விஷ்ணுவிஷால், ரம்யா நம்பீசன், சமுத்திரக்கனி, லிங்குசாமி ஆகியோர்களுக்கு கிப்ட் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் சிலருக்கும் இந்த கிப்ட் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டு இந்த பாடலில் இணைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் நாளை வெளியாகவுள்ள இந்த பாடல் இந்த படத்தின் புரமோஷனுக்கு மட்டுமே என்றும் படத்தில் இந்த பாடல் இருக்காது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அசோக்செல்வன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, அனுபமாகுமார், பாலசரவணன், நாசர், ஜான்விஜய், ஜி.மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.