close
Choose your channels

இயக்குனர் ஹரிக்கு சூர்யாவின் ஆச்சரிய பரிசு

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்த 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முந்தைய சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களை போல ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை இந்த படத்திலும் இருப்பதாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஹரிக்கு ஆச்சரியமான பரிசு ஒன்றை அளித்துள்ளார். டொயட்டோ நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான டொயோட்டா ஃபார்ட்டியூனர் கார் ஒன்றை சூர்யா தனது அன்பு பரிசாக அளித்துள்ளார். புதிய காரின் முன் சூர்யாவும், ஹரியும் நிற்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள 'சி3' திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை பெற்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.