close
Choose your channels

ரஜினி-கமல் டைட்டிலில் இளமையுடன் களமிறங்கும் சுசீந்திரன்

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது படத்தில் பெரிய ஸ்டார் இருக்க மாட்டார்கள், ஆனால் கதையே பெரிய ஸ்டாராக இருக்கும்.

அந்த வகையில் மீண்டும் முழுக்க முழுக்க புதுமுகங்களுடன் ஒரு படத்தை வலிமையாக கதையுடன் இயக்க தயாராகிவிட்டார் சுசீந்திரன். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா நடித்த வெற்றிப்படமான 'இளமை ஊஞ்சலாடுகிறது' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ள சுசிந்திரன் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டதாக செய்திகள் உறுதி செய்துள்ளன.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கி முடித்துள்ள 'அறம் செய்து பழகு' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருவதாகவும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.