close
Choose your channels

'பிரபுதேவா-தமன்னா' படத்தில் 'பாகுபலி' நாயகன்

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'கொலையுதிர் காலம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படமான 'காமோஷி (Khamoshi) திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் பிரபுதேவா மற்றும் தமன்னா நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படம் இந்தியாவின் முதல் 8K ரெசலூசன் படம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டே படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற பிரபாஸ் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரபாஸ் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படம் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் தமன்னா காதுகேட்காத வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை பூமிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.