close
Choose your channels

நயன்தாரா படத்தில் முதன்முதலாக தமன்னா

Thursday, March 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது டோரா', 'இமைக்கா நொடிகள்', 'அறம்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் தயாரிப்பில் சக்ரி டோலட்டி இயக்கி வரும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், இதில் நயன்தாரா நடித்த கேரக்டரில் நடிக்க தமன்னா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உண்மை என்றால் நயன்தாரா நடிக்கும் படத்தின் ரீமேக்கில் தமன்னா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் பிரபுதேவா வில்லனாகவும், மற்றொரு முக்கிய கேரக்டரில் பூமிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.