close
Choose your channels

எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். வனமகன் நாயகி சாயிஷா

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' திரைபடம் இம்மாதம் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு காரணமாக இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாயிஷாவுக்கு இதுவே முதல் தமிழ்ப் படம். இன்னும் முதல்படமே வெளிவராத சூழ்நிலையில் அவர் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சாயிஷாவின் கால்ஷீட் வாங்கி தருகிறேன் என்றும் நான் தான் அவருடைய மேனேஜர் என்றும் ஒருசிலர் கூறி அவர் பெயரை முறைகேடாக பயன்படுத்துவதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தததும் சாயிஷா தனது டுவிட்டரில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதன்படி 'தமிழ், தெலுங்கு படத்தில் நடிக்கவும், மற்ற காரணங்களுக்கும் என்னை அல்லது எனது தாயாரை நேரடியாக தொடர்பு கொள்ளவும் என்றும், தனக்கென மேனேஜர் என்று யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.