close
Choose your channels

அபிராமி ராமநாதன் தலைமையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை

Wednesday, May 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் அனுபவமுள்ள பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், விஷால் தலைமையிலான இளைஞர் அணி பெரும்பாலான பதவிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இதன் தலைவராக பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் .அபிராமி ராமநாதன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அமைப்பின் மற்ற நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை (Tamil Film Chamber of Commerce) என்ற இந்த அமைப்பு ஏற்கனவே இருந்தாலும் தற்போது புத்துணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக தேர்வு செய்யபட்ட அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்' என்று கூறியுள்ளார்.

இந்த அமைப்புக்கு தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, அன்பு செழியன், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், செயலாளர் ராஜமன்னார், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.