close
Choose your channels

கிளைமாக்ஸை நெருங்கியது 'தல 56'

Thursday, August 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துவரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராமி மால் மற்றும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்னும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் மற்றும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் மீதமிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் பிசியான நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமிமேனன் ஆகிய இருவரின் கால்ஷீட் தேதிகளும் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக ஒரே நாளில் தேவைப்படுவதாகவும், இந்த தேதிகள் கிடைத்தவுடன் விரைவில் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அத்துடன் வசனக்காட்சிகளில் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.