close
Choose your channels

'அஜீத் 56' படத்தின் டைட்டில்?

Tuesday, July 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் முடிவடைந்து தற்போது படக்குழுவினர் சென்னைக்கு திரும்பியுள்ளனர். நான்காவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து அதற்குள் படத்தின் டைட்டிலை முடிவு செய்ய சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் டைட்டிலுக்காக ஏகப்பட்ட பெயர்களை சிறுத்தை சிவாவும், அவருடைய உதவி இயக்குனர்களும் பரிசீலனை செய்து வரும் நிலையில் 'வரம்' என்ற டைட்டில் அஜீத்துக்கு பிடித்துவிட்டதாகவும், இந்த டைட்டிலை இறுதி செய்து விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஆகஸ்ட் முதல் வாரத்தில் நான்காவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் கொல்கத்தா செல்லவுள்ளனர். இந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலான பகுதிகள் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. எப்படியும் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் திரையிட அனைத்து முயற்சிகளும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்யப்பட்டு வருகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்த படம் ரசிகர்களுக்கு 'வரமாக' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.