close
Choose your channels

'தல 57' படத்தின் புதிய அப்டேட்

Monday, April 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'அஜித் 57' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதையும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கவிழா பூஜை வரும் மே மாதம் 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் தொடக்கவிழா மே 1-ல் இல்லை என்றும் ஆனால் மே மாதத்தில் இன்னொரு தேதியில் தொடக்கவிழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டு லோகேஷனில் படமாக்கப்படவுள்ளதாகவும், 'பில்லா', 'ஆரம்பம்' பாணியில் இந்த படம் ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் இரு நாயகிகளும் யார் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும், க்ரித்தி சானோன் ஒரு நாயகி என்பது வதந்தியே என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றி மற்றும் கலை இயக்குனராக மிலன் ஆகியோர் பணியாற்றவுள்ளனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.