close
Choose your channels

'அஜித் 57' படத்தின் அட்டகாசமான டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கும், டைட்டில் என்னவாக இருக்கும் என்று கோடிக்கணக்கான அஜித் ரசிகர்கள் எந்தவித தகவலும் தெரியாமல் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஃபர்ஸ்ட்லுக் வெளிவருவதற்கு சில மணி நேரம் முன்பே அஜித் வெற்று உடம்புடன் ஃபர்ஸ்ட்லுக்கில் தோன்றவுள்ளார் என்பதை மிகச்சரியாக கணித்து கூறியது நாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் கூறியிருந்தபடியே அஜித்தின் வெற்று உடம்பு, அட்டகாசமான பின்னணி காட்சிகள், 'விவேகம்' என்ற டைட்டில் ஆகியவை இந்த ஃபர்ஸ்ட்லுக்கின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

அஜித்-சிவா இணைந்த முந்தைய இரண்டு படங்களின் டைட்டில் போலவே இந்த படத்தின் டைட்டிலும் Vயில் ஆரம்பித்து Mல் முடிவதால் அதே வெற்றிகளை இந்த படமும் பெறும் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

மேலும் இன்று அதிகாலை டைட்டில் வெளியான வினாடி முதல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமான ஷேர் செய்யப்பட்டு ஒருசில நிமிடங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆனது. அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட்லுக் வெளியான பத்தே நிமிடங்களில் மதுரை, திருநெல்வேலியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் 'விவேகம்' பர்ஸ்ட்லுக் போஸ்டரை தயார் செய்து ஒட்டி வருகின்றனர். 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பார்க்கும்போது இந்த படத்தின் வசூல் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.