close
Choose your channels

5 லட்சம் புத்தகங்களுக்கு மத்தியில் அஜித் சிலை: நெல்லை ரசிகர்கள் அசத்தல்

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்துக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ரூ.5 லட்சம் செலவில் நூலகம் மற்றும் அஜித்தின் 7 அடி உயர வெங்கல சிலை வைக்க இன்று அடிக்கல் நாட்டினர். இதில் ஏராளமான அஜித் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை அருகே உள்ள தேவர்குளம் என்ற இடத்தில் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த நூலகம் அமையவிருப்பதாகவும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தில் ஐந்து லட்சம் புத்தகங்கள் வைக்கவுள்ளதாகவும் அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த பகுதி மாணவர்கள் நூலகம் செல்ல வேண்டுமானால் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மேலும் அவர்கள் கூறினர்
இந்த நூலகத்தின் நுழைவாயிலில் வைக்க ஏழு அடி அஜித்தின் வெண்கல சிலை அமைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், நூலகம் கட்டி முடிக்கப்பட்டதும் அதைத் திறந்து வைக்க வருமாறு அஜித்குமாரை அழைப்போம் என்று கூறிய அஜித் ரசிகர்கள் அஜித் நிச்சயம் இந்த நூலகத்தை திறந்து வைக்க வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.