close
Choose your channels

முடிந்தது 'விவேகம்' படப்பிடிப்பு: அஜித் சென்னை திரும்புவது எப்போது?

Friday, May 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று அதிகாலை 12.01க்கு வெளியான அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் குறித்த செய்திகள் இன்னும் இணணயதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எனவே அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படக்குழுவினர் சென்னை திரும்பியவுடன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்பட இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இரவுபகலாக பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
'வேதாளம்' படத்திற்கு பின்னர் இரண்டு வருட இடைவெளி விட்டு வெளிவரும் அஜித் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் இருந்தால், 'பாகுபலி 2' படத்திற்கு மீண்டும் ஒரு வசூல் சுனாமியை தென்னிந்திய திரையுலகம் நிகழ்த்தும் என்பது மட்டும் உறுதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.