close
Choose your channels

இதுதான் 'விவேகம்' படத்தின் கதையா?

Tuesday, August 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாகிய 'விவேகம்' ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் ஒருசில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் 'விவேகம்' படத்தின் கதை இதுதான் என்று ஒரு செய்தி இணையதளங்களில் பரவி வருகிறது. அதாவது இந்தியா மீது தாக்குதல் நடத்த வெளிநாட்டு தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த திட்டத்தை அறிந்த இந்திய உளவுத்துறை, இந்தியாவை தாக்கும் முன் அந்த தீவிரவாதிகளை அழிக்க ஒரு குழுவை நியமிக்கின்றனர். அஜித் தலைமையிலான அந்த குழுவில் விவேக் ஓபராயும் உள்ளார். இந்த குழு பல்கேரியா சென்று தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது
அப்போது அந்த தீவிரவாதிகளில் முக்கியமான ஒருவன் அஜித்தின் நெருங்கிய நண்பராக உள்ளார் என்பது தெரியவருகிறது. தாய்நாட்டை காப்பாற்ற அந்த வில்லன் குழுக்களை அஜித் தலைமையிலான குழு தீவிரவாதிகளை எப்படி அழிக்கின்றது என்பதுதான் மீதிக்கதை. இப்படி ஒரு செய்தி காற்றில் பரவி வந்தபோதிலும் உண்மையில் இதுதான் கதையா என்பது ஆகஸ்ட் 24ஆம் தேதிதான் தெரியவரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.