close
Choose your channels

தமிழகத்தின் முதல் அஜித் சிலை நாளை திறப்பு!

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெல்லை அஜித் ரசிகர்கள் அஜித்தின் 7 அடிஉயர வெண்கல சிலையும், நூலகமும் அமைக்க அடிக்கல் நாட்டினர் என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் நாளை கும்பகோணத்தில் அஜித் சிலை திறக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த அஜித் ரசிகர்களால் செய்யப்பட்ட அஜித் சிலை முழு அளவில் தயாராகிவிட்டது. சிமிண்டால் செய்யப்பட்ட இந்த சிலையை நாளை திறக்கவுள்ளதாக அஜித் ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.
சிலை திறப்பு விழா மட்டுமின்றி நாளை நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம்களும் அமைக்கப்படவுள்ளதாம். அஜித்தின் 25 வருட சினிமா வரலாற்றை கொண்டாடும் விதமாக ரூ.1 லட்சம் செலவில் இந்த சிலை அமைக்கபப்ட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அஜித்துக்கு சிலை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் கும்பகோண அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.