close
Choose your channels

அஜித்தின் 'விவேகம்' டீசருக்கு பாராட்டுக்களை குவிக்கும் கோலிவுட் பிரபலங்கள்

Thursday, May 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் அட்டகாசமான 'விவேகம்' படத்தின் டீசர் நேற்றிரவு சரியாக 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைத்தளங்களை புரட்டி போட்டது. இந்த டீசருக்கு லைக்குகளும் பார்வையாளர்களும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் குவிந்து வரும் நிலையில் கோலிவுட் திரையுலகினர்கள் பலரும் இந்த டீசரை பாராட்டி தங்கள் சமூக வலைத்தளங்களில் 'விவேகம்' படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ்: வாவ்....அஜித் சாரின் விவேகம்' டீசரில் என்ன ஒரு புத்திசாலித்தனம். அஜித் சார் சூப்பர் ஹேண்ட்சமாக இருக்கின்றார். விவேகம் டீமுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

அருண்விஜய்: தனித்தன்மையான டீசர்: அதிரவைக்கும் காட்சிகள். உயர்ந்த தரம். தல லுக் செமையாக உள்ளது

ரம்யா நம்பீசன்: அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் உள்ளது விவேகம் டீசர். அஜித் சாரின் லுக், நடிப்பு, ஸ்டைல் இதற்கு முன்னர் பார்த்திராதது. இயக்குனர் சிவா மற்றும் படத்தின் முழு டீமுக்கு எனது வாழ்த்துக்கள்

கபிலன் வைரமுத்து: விவேகம் டீசர் மகிழ்ச்சி அளிக்கின்றது, மேலும் இதை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்

இயக்குனர் விக்னேஷ் சிவன்: 'விவேகம்' டீசர் வேற லெவல். இயக்குனர் சிவாவின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிஅது. ரூபனின் எடிட்டிங் சூப்பர்

சாந்தனு பாக்யராஜ்: விவேகம் டீசர் வெறித்தனமானது. 'Never Ever Giveup' வசனம் சூப்பர்

பாக்யராஜ் கண்ணன்: தல மாஸ்

இயக்குனர் அறிவழகன்: விவேகம் டீசரில் வேகம் மட்டுமின்றி வீரமும்,இருந்தது. ஒவ்வொரு பிரேமிலும் அஜித் மிரட்டுகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.