close
Choose your channels

தளபதியின் மெர்சல்: வியக்க வைக்கும் வியாபாரம்

Sunday, July 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டது.

முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. விஜய்-அட்லியின் 'தெறி' மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதே கூட்டணியில் உருவான 'மெர்சல்' படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற முன்னணி சாட்டிலைட் நிறுவனங்கள் போட்டி போட்டதாகவும் இறுதியில் ஜீ டிவி நிறுவனம் ரூ.30 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் மற்ற ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.