close
Choose your channels

தனி ஒருவனில் நயன்தாராவின் தைரியம்+ரொமான்ஸ். எம்.ராஜா

Sunday, July 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'தனி ஒருவன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதள ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எம்.ராஜா, இந்த படம் குறித்தும், படத்தில் நடித்த நட்சத்திரங்கள் குறித்தும் ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்காக இதுவரை இல்லாத அளவிற்கு ஹோம் ஒர்க் செய்ய அதிக டைம் எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் படத்தின் அவுட்புட்டை பார்த்ததும் தன்னுடைய உழைப்பு வீண்போகவில்லை என்பதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறிய எம்.ராஜா, இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ள கேரக்டர் மிகவும் தைரியமான, அதே நேரத்தில் ரொமான்ஸ் செய்யும் வித்தியாசமான கேரக்டர் என்று கூறினார்.

மேலும் தன்னுடைய சகோதரர் ஜெயம் ரவி, இந்த படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மிகவும் அபாரமானது என்றும், அவருடைய முழு உதவி இல்லையென்றால் இந்த படம் இந்த அளவுக்கு பேசப்படும் படமாக வந்திருக்காது என்றும் கூறினார்.

இதுவரை மென்மையான கேரக்டர்களில் மட்டும் நாம் பார்த்துவந்த அரவிந்தசாமி, இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பார். அவருடைய கேரக்டர்தான் இந்த படத்தின் ஹைலைட் என்று ராஜா கூறியுள்ளார்.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி, நாசர், வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இசையமைத்ஹ்டுள்ளார். ராம்ஜியின் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பில் உருவான இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.