close
Choose your channels

கார்த்தியின் 'தீரன் அத்தியாயம் ஒன்று' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, September 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் கார்த்தி நடித்து வரும் 'தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' வெளியாகும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று பரவலாக செய்திகள் கடந்த சில நாட்களாக பரவியது. ஆனால் தற்போது இந்த படம் மெர்சலுடன் மோதவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆம் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் நவம்பர் 17ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசர் செப்டம்பர் 27ஆம் தேதியும், டிரைலர் அக்டோபர் 17ஆம் தேதியும் வெளிவரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நாளில் டீசர், டிரைலர் முதல் பட வெளீயீடு வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஷிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.