close
Choose your channels

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் 'தெறி' நடிகை

Thursday, May 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டதை நெருங்கிவிட்டது. இந்த நிலையிலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற சஸ்பென்ஸை கவுதம் மேனன் வெளியிடவில்லை. மிஸ்டர் எக்ஸ் என்றே இதுவரை அவர் தெரிவித்து வருகிறார். பாடல் வெளியீட்டு விழாவிலாவது இசையமைப்பாளரை அறிமுகம் செய்வாரா என்று பார்ப்போம்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் மட்டுமின்றி இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்களின் பெயர்களையும் கவுதம் மேனன் இதுவரை வெளியிடவில்லை. தனுஷ், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை சுனைனா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தூள்ளது. விரைவில் மும்பையில் நடைபெறவுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சுனைனா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த 'தெறி' படம் போல ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகும் கேரக்டரா? அல்லது படத்தின் திருப்புமுனைக்கு உதவும் முக்கிய கேரக்டர் சுனைனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.