close
Choose your channels

'தெறி' : பரபரப்பை ஏற்படுத்திய 15 நொடி புரமோ வீடியோ

Monday, April 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாட்கணக்கில் இருந்த நிலையில் தற்போது மணிக்கணக்கில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக சற்று முன்னர் இணையதளங்களில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜித்து ஜில்லாடி' என்ற பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ வீடியோ வெளியான நிமிடத்தில் இருந்து விஜய் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்யின் அட்டகாசமான கலர்கலரான காஸ்ட்யூம், கலர் கண்ணாடிகள், பிரமாண்டமாக செட்டுக்கள், விஜய்யின் அதிர வைக்கும் நடனங்கள் என வெறும் 15 நொடி புரமோ வீடியோவில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த புரமோ வீடியோவை ரசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.