close
Choose your channels

பிரகாஷ் ராஜுடன் மீண்டும் இணையும் திமிரு நடிகை

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'காஞ்சிவரம்' படத்தில் இணைந்த இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் பிரகாஷ்ராஜ் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக வெளிவந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இந்நிலையில் காஞ்சிவரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஒரு நடிகையும் தற்போது இந்த புதிய படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

திமிரு, வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்த ஸ்ரேயா ரெட்டிதான் இந்த படத்தில் இணைந்திருக்கும் நடிகை. நடிகர் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரேயா ரெட்டி, சமீபத்தில் 'அண்டாவ காணோம்' என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். இந்த படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரியதர்ஷன் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கமர்ஷியல் மற்றும் காமெடி மட்டுமின்றி இந்த படம் விருதுகளை நோக்கி குறிவைத்தும் எடுக்கப்படுவதாக ஸ்ரேயா ரெட்டி கூறியுள்ளார். பிரியதர்ஷன் - பிரகாஷ்ராஜ் இணைந்துள்ள இந்த படத்தில் தற்போது ஸ்ரேயா ரெட்டியும் இணைந்துள்ளதால் படத்திற்க் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.