close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில்?

Sunday, November 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'தூங்காவனம்' திரைப்படம் ஹிட் ஆன நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படம் ஒரு முழுநீள நகைச்சுவை படம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'அம்மா நானா ஆட்டா' (Amma Nanna Aata) என்ற டைட்டில் தெலுங்கு மொழி பதிப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தமிழ் உள்பட மற்ற மொழிகளின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அமலா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கமலுடன் இணைந்து சத்யா, பேசும் படம் மற்றும் வெற்றி விழா ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.