close
Choose your channels

த்ரிஷா நடிக்கும் முதல் மலையாள படத்தில் சூப்பர் ஸ்டார்?

Saturday, August 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான ஹிட் கொடுத்த நடிகை த்ரிஷா முதன்முதலாக மலையாள திரைப்படம் ஒன்றில் அதுவும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திலீப்புடன் அவர் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் அந்த செய்தி பின்னர் வதந்தியாக மாறிவிட்ட நிலையில் தற்போது அவர் மலையாள திரையுலகில் நுழையவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


அறிமுக இயக்குனர் உதய் ஆனந்தன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'ஒயிட்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளதாகவும், இது ஒரு மெச்சூரிட்டியான ரொமான்ஸ் கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

த்ரிஷா நடிக்கவுள்ள வேடத்தில் முதலில் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்டால், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகை என்ற புகழ் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.