close
Choose your channels

தனுஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட த்ரிஷா

Sunday, November 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு அதிரடி ஆக்சன் படத்திலும், வேல்ராஜ் இயக்கத்தில் 'தங்கமகன்' படத்திலும் நடித்து முடித்துவிட்ட நடிகர் தனுஷ், அடுத்து 'எதிர்நீச்சல், காக்கிச் சட்டை' இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியா ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி நடிக்கவுள்ளார் .மேலும் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு இந்த படத்தில் 'படையப்பா' நீலாம்பரி போன்ற நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு படங்களில் தனுஷுடன் நடிக்க இருந்து கடைசி நேரத்தில் அந்த படங்களை மிஸ் செய்துவிட்டதாகவும் தற்போது தனுஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் அந்த படத்தில் தான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.