close
Choose your channels

தியாக செம்மல் தினகரனே வருக வருக! அப்ப காந்தி, காமராஜர் எல்லாம் யார்?

Saturday, June 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து சிறை சென்ற காந்தி, காமராஜர் போன்ற தியாக செம்மல்கள் விடுதலையானபோது கூட இந்த வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். ஆனால் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிக்கிய வழக்கில் தினகரன் விடுதலையாகி, அதுவும் ஜாமீனில் விடுதலையானதற்கு அதிமுக அம்மா அணியினர் ஆரவாரம் பொதுமக்களையும் அரசியல் விமர்சகர்களையும் முகம் சுழிக்க செய்துள்ளது.

நேற்று டெல்லி நீதிமன்றம் தினகரனுக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் திகார் சிறையில் இருந்து விடுதலையாகி இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து தினகரன் வீடு உள்ள அடையாறு பகுதி வரை அதிமுக அம்மா அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாரை தப்பட்டை, மேளம், குத்தாட்டம், கொடி, தோரணம், பளபளக்கும் பிளக்ஸ் போர்டு, அதில் தியாக செம்மல் தினகரனே வருக வருக என்ற வாசகம் என்று அதிமுக அம்மா அணியினர் அமர்க்களப்படுத்திவிட்டனர். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறை சென்றவர் தியாக செம்மல் சென்றால் சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்ற காந்தி, காமராஜர் ஆகியோர்கள் யார்? என்ற கேள்வியே அனைவர் மனதிலும் எழுகிறது.

இவ்வளவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இனிமேல் சசிகலா குடும்பத்தினர்களின் தலையீட்டை கட்சியில் அனுமதிப்பதில்லை என்று முதல்வர், சீனியர் அமைச்சர்கள் உள்பட பலர் முடிவெடுத்தனர். இந்த நிலையில் தினகரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரவேற்பு கொஞ்சம் ஓவராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

அரசியலில் ஆடம்பரம் இல்லாமல் சாணக்கியத்தனத்துடன் செயல்படுபவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதையும் அவசர முடிவும், ஆடம்பரமும் அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும் என்பதையும் தினகரன் எப்போது புரிந்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.