close
Choose your channels

அஜித்தின் ஹாலிவுட் முன்னோடி நடிகருக்கு இரட்டை குழந்தை

Wednesday, June 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் கடந்த சில வருடங்களாகவே நிஜத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தான் இருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு இந்த தோற்றம் கச்சிதமாக பொருந்திவிட்டதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இந்த தோற்றத்திற்கு கிடைத்தது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி போல் அஜித்தின் தோற்றம் இருப்பதால் அவரை கோலிவுட்டின் ஜார்ஜ் குளூனி என்று கூட அவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இவ்வாறு சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித்துக்கு முன்னோடியாக இருக்கும் ஜார்ஜ் குளூனிக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஜார்ஜ் குளூனியின் மனைவி அமல் குளூனி சமிபத்தில் கர்ப்பமான நிலையில் நேற்று அவருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டை குழந்தைகளுக்கு எலா மற்றும் அலெக்சாண்டர் என்று ஜார்ஜ் குளூனி தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர்.

56 வயது ஜார்ஜ் குளூனிக்கு இந்த இரட்டைக்குழந்தைகள் தான் முதல் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் குளூனி மற்றும் அமல் குளூனி திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு இத்தாலி உள்ள வெனிஸ் நகரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.