close
Choose your channels

மனிதன்' டிராக்லிஸ்ட் வெளியீடு

Wednesday, April 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'கெத்து' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த 'மனிதன்' திரைப்படம் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
1. 'அவள்' என்று தொடங்கும் முதல் பாடலை ப்ரதீப், ப்ரியா ஹெமேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.
2. முன் செல்லடா' என்று தொடங்கும் 2வது பாடலை மதன் கார்க்கி எழுத அதை அனிருத் மற்றும் ஏ.டி.கே பாடியுள்ளனர்.
3. 'பொய் வாழ்வா' என்று தொடங்கும் பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலை சந்தோஷ் நாராயணன், விஜய் நரேன் ஆகியோர் பாடியுள்ளனர்.
4. 'கொண்டாட்டம்' என்று தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுத ராடர் மற்றும் திவ்யா ரமணி பாடியுள்ளனர்.
5. மனிதன் பட தீம் ஆக அமைந்துள்ள இந்த பாடலை கல்பனா ராகவேந்தர் பாடியுள்ளார்.
'என்றென்றும் புன்னகை' அஹ்மது இயக்கியுள்ள இந்த படத்தில் உதயநிதியுடன் ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.