close
Choose your channels

விஜய்-அஜித் படங்களை தயாரிப்பது எப்போது? உதயநிதி

Monday, April 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'குருவி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தயாரிப்பாளராக மட்டுமின்றி வெற்றிகரமான ஹீரோவாகவும் மாறிவிட்டார். இந்நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து எப்போது படமெடுப்பார் என்று ஆவலுடன் அனைவரும் காத்திருக்கும் நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், விஜய் சார் எப்போது தேதி கொடுக்கின்றாரோ அப்போது அவரை வைத்து படமெடுக்க தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை வைத்து எப்போது படம் தயாரிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி 'அஜித்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் அஜித்துடன் பேசி வருகிறார். அஜித் சார்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மனிதன்' படத்தை முடித்துவிட்டார். மேலும் இன்று அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜையும் சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment