close
Choose your channels

'புலி' நடிகையின் அடுத்த பட ரிலீஸ் தேதி

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அபியும் நானும், மொழி, பயணம், கெளரவம் உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகனின் அடுத்த படமான 'உப்புக்கருவாடு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 27 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இன்று முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விஜய்யின் 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தை ராம்ஜி நரசிம்மன் தயாரித்துள்ளார். இந்த படம் கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள ஒரு காமெடி படம் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் கருணாகரன் இயக்குனர் கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அவருக்கு உதவியாளராக நடிகர் நாராயண் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் நாராயண் ஏற்கனவே ராதாமோகனின் 'பயணம்' படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.