close
Choose your channels

கலையரசன் - தன்ஷிகாவின் 'உரு'. திரை முன்னோட்டம்

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' வெற்றிப்படத்தில் நடித்த கலையரசன் மற்றும் தன்ஷிகா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'உரு'. தமிழில் வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை விக்கி ஆனந்த் இயக்கியுள்ளார். கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, ஜெயபாலன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜோஹன் ஷிவனேஷ் இசையமைத்துள்ளார். வையம் மீடியாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் எழுத்தாளர் கேரக்டரில் நடித்திருக்கும் கலையரசன், ஒரு நாவல் எழுதுவதற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள் தான் இந்த படத்தின் கதை. திகில், மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படம் என்றாலும் இந்த படத்தில் பேய் இல்லை என்று கூறுகிறார் இந்த படத்தின் இயக்குனர் விக்கி ஆனந்த்.

மேலும் அவர் கூறுகையில், உரு` என்றால் உருவம் என்ற அர்த்தமாம். மேலும் உருவம் என்ற வார்த்தைக்கு பயம் என்ற பொருளும் உள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை, பயம் என்ற விஷயத்தை மையமாக வைத்து, படம் தயாராவதால், உரு` என, தலைப்பு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் விக்கி ஆனந்த் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'சைக்கோ த்ரில்லர் படம் என்பதால், பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். உரு படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், என் கைகளைப் பிடித்துக்கொண்டு மனம்விட்டுப் பாராட்டினார். அதுபோல், கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் பாராட்டியதுடன், சில ஆலோசனைகளையும் சொன்னார்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது., குறிப்பாக 'ஒரு கொலையை க்ரைம் ஆக இல்லாமல் கலையாக பார்க்கறது படத்தின் கதை' என்ற வரிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.