close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் 'வைபவ்'

Wednesday, June 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் அவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரத்னகுமார் என்பவர் இயக்கி வருகிறார். 'மேயாத மான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வைபவ் நடித்து வருகிறார்.

இது ஒரு காதல் படம் என்றும் இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் உள்பட மற்ற விபரங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ப்ரியா என்பவர் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.