close
Choose your channels

'வேதாளம்' படத்தின் 2 வீடியோ லீக். அதிர்ச்சியில் படக்குழு

Friday, November 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு வீடியோக்கள் இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் படக்குழுவினர் மற்றும் அஜீத் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அஜீத்தின் அறிமுக காட்சி வீடியோ ஒன்று நான்கு வினாடிகளும், ஆலுமா டோலுமா பாடலின் ஏழு வினாடி வீடியோவும் லீக் ஆகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டப்பிங்கின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

விஜய்யின் 'புலி' படத்திற்கும் இதேபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.