close
Choose your channels

அஜித் பிறந்த நாளில் ஸ்பெஷல் காட்சியின் திட்டங்கள்

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தற்போதே அட்வான்ஸாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது, முதியோர் இல்லத்தில் அன்னதானம் உள்பட பல சமூக சேவைகளை அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு செய்து வரும் அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாட கவுண்ட் டவுனை ஆரம்பித்துவிட்டனர்

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை 4 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அஜித்தின் 'வீரம்', 'வேதாளம்' மற்றும் 'மங்காத்தா' படங்களை திரையிட பல திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.