close
Choose your channels

வெங்கட்பிரபுவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Saturday, May 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்களை வேட்பாளர் அறிவிப்பு போன்று அவர் பலகட்டமாக வெளியிட்டு வருகிறார். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல்களை வெங்கட்பிரபு நேற்று வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகிய தொகுதிகளுக்க் அவர் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ், இசையமைப்பாளர் பிரேம்ஜி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல், கலை இயக்குனர் விதேஷ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபுவின் அனைத்து தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பு பெற்ற யுவன்ஷங்கர் ராஜாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் நடிகர், நடிகையர் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.