close
Choose your channels

ரஜினி-ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்த நிலையில் இந்த சூப்பர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வித்யாபாலனை சந்தித்த படக்குழுவினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம் ஆவதற்கு முன்னர் இயக்குனர் ரஞ்சித், வித்யாபாலனிடம் பேசியதாக கூறப்பட்டது.

இந்த படத்தின் ஸ்கிர்ப்ட் பணியை முடித்துவிட்ட ரஞ்சித், தற்போது முழுவீச்சில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும், மிகவிரைவில் இந்த படத்தின் அனைத்து தகவல்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.