close
Choose your channels

நியூயார்க்கில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா பிறந்த நாள் கொண்டாட்டம்

Tuesday, September 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தின் படப்பிடிப்பின்போதே விக்னேஷ்சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்வது போன்று கடந்த ஆண்டு நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவின் போது இருவரும் சிங்கப்பூருக்கு ஒன்றாக சென்றனர். 

இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் பிறந்த நாளை இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். யாருடைய தொந்தரவும் இன்றி காதல் பறவைகளாக நியூயார்க்கை வலம் வந்த இந்த ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்பாக  அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் ஒரு தேர்ந்த புகைப்படம் நிபுணர் எடுக்கப்பட்டது போல் உள்ளது. விக்னேஷ் சிவனின் அடுத்த பிறந்த நாளில் தம்பதி சகிதமாய் இதே நியூயார்க்கில் கொண்டாட வாழ்த்துவோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.