close
Choose your channels

விஜய் 59 (விஜய் அட்லி) பட ரிலிஸ் தேதி

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் புலி படத்தை தொடர்ந்து , ராஜா ராணி டைரக்டர் அட்லி இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் . இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்க உள்ளனர் . இந்த படத்தின் வில்லனாக நடிக்க சத்யராஜை அணுகியதாகவும் ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார் விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ்.

முக்கியமான அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் மகேந்திரனை அணுகியதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசை அமைக்கவுள்ளார். இது ஜி வி பிரகாஷின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தை கலைபுலி தாணு தயாரிக்கிறார்

தற்பொழுது விஜய்-அட்லி (விஜய் 59) மூவி ஜனவரி 15 அல்லது ஜனவரி 26 ரிலிசாகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.