close
Choose your channels

விஜய் படத்தில் ஷங்கரின் பிரமாண்டம்

Tuesday, November 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லியின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்காக விஜய் சமீபத்தில் 'செல்லாக்குட்டி' என்ற பாடலை பாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலில் விஜய்-சமந்தா அபாரமாக நடனம் ஆடியிருப்பதாகவும், அட்லியின் அற்புதமான விஷுவலை ரசிகர்கள் ரசிக்கலாம் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தது அனைவரும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த பாடலில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாடலை பார்க்கும்போது ஷங்கர் பட பாடலை பார்த்ததுபோன்ற பிரமாண்டமான உணர்வு ஆடியன்ஸ்களுக்கு தோன்றும் என்றும் செய்திகள் கூறப்படுகிறது. ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, அவரை போன்று சிஜி காட்சிகள் அடங்கிய உருவாக்குவதில் ஆச்சரியம் இருக்க முடியாது என்பதும் உண்மைதான்.

ஏற்கனவே இந்த படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு 'காக்கி' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.