close
Choose your channels

'விஜய் 60' படத்தின் நாயகி மற்றும் இயக்குனர் யார்?

Sunday, October 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் நிலையில் அட்லி இயக்கத்தில் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தின் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

'விஜய் 60' படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் என்பதை அனைவரும் அறிந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நாயகி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக எமிஜாக்சன் அல்லது நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கனவே விஜய்யுடன் 'வில்லு' படத்தில் நாயகியாகவும், சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஏ.எம்.ரத்னம், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கடந்த 2000ஆம் ஆண்டு இணைந்த 'குஷி' சூப்பர் ஹிட் ஆகியது போல் மீண்டும் ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கூடிய சூப்பர் ஹிட் படத்தை உருவாக்க இந்த மும்மூர்த்திகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.