close
Choose your channels

விஜய் 60' வாய்ப்பு அஜித்தால் கிடைத்ததா?

Saturday, November 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படத்தை இயக்கும் வாய்பை பெற்ற 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன், இந்த வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என பல ஊடகங்கள் பலவாறு செய்தி வெளியிட்டு வரும் நிலையில் இந்த வாய்ப்பு அவருக்கு அஜீத்தால் கிடைத்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு பரதன் வசனம் எழுதினார். அவர் எழுதிய வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தினர் விஜய்க்கு ஏதாவது கதை வைத்துள்ளீர்களா? என்று கேட்டதாகவும், அதற்கு பரதன் தற்போது இயக்கவுள்ள கதையை விஜயா நிறுவனத்திடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜயா நிறுவனத்தினர் இந்த கதையை விஜய்யிடம் காண்பித்தபோது விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டதால் விஜய் 60' படத்தை பரதன் இயக்குவது உறுதியானதாகவும் கூறப்படுகிறது. 'வீரம்' படத்தில் அதிரவைத்த வசனங்கள் போல 'விஜய் 60' படத்திலும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.