close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் கபாலியுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

Tuesday, November 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவு 12மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் 'விஜய் 60' படம் குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்ததை பார்த்தோம்.

விஜய்யின் 60வது படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மதி என்றும், எடிட்டர் ப்ரவீண் என்றும், தயாரிப்பு நிறுவனம் விஜயா புரடொக்ஷன்ஸ் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'விஜய் 60' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்தோஷ் நாராயணனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கியுள்ள விஜய்க்கும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.